Scrolling recent posts

Monday, April 2, 2012

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 94 வது இடம் - முதலிடம் டென்மார்க்!

திங்களன்று பூட்டானில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையில், உலக மக்களின் நல்வாழ்க்கை மற்றும் வாழ்க்கை தரத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் மாநாட்டில், உலக நாடுகளில் மகிழ்ச்சியாக வாழும் மக்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை பொருளாதார நிபுணர்கள் ஜான் ஹெல்லிவெல், ரிச்சர்ட் லயர்ட் மற்றும் ஜெப்ரி சச்சேஸ் ஆகியோர் வெளியிட்டனர்.

உலகம் முழுதும் வெவ்வேறு குழுக்களால் வெவ்வேறு கேள்விகள் அடிப்படையில் நடந்த சர்வே முறையில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியல் மூலம் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியாக வாழும் மக்களில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 94 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

முதல் பத்து இடங்கள் பிடித்த நாடுகள் பட்டியல்: 

1. டென்மார்க்
2. பின்லாந்த் 
3. நோர்வே
4. நெதர்லாண்ட்ஸ் 
5. கனடா 
6. சுவிட்சர்லாந்து 
7. ஸ்வீடன் 
8. நியூசிலாந்து    
9. ஆஸ்திரேலியா 
10. அயர்லாந்த் 

அமெரிக்கா இப்பட்டியலில் 11 வது இடத்தையும், சீனா 112 வது இடத்தையும் பிடித்துள்ளன.

இவ்வரிசையில், பாகிஸ்தான் 84 வது இடம், பிலிப்பின்ஸ் 103  வது இடம், பங்களாதேஷ் 104 வது இடம், இலங்கை 130  வது இடம், ஆப்கானிஸ்தான் 131  வது இடமும் பிடித்துள்ளன.

மொத்தம் 156 நாடுகளின் பட்டியல் வெளியடப்பட்டது. இதில் கடைசியாக டோகோ இடம் பிடித்துள்ளது. 

கடைசியில் இடம் பெற்ற நாடுகள் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நாடுகள் என்பது குறிப்பிடதக்கது.

###அடுத்த வல்லரசுகள் எனப்படும் சீனா, இந்தியா மக்கள் மகிழ்ச்சியாக இல்லை, அவர்கள் வாழ்க்கையை போராடியே கழிக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி!### 







No comments:

Post a Comment