Scrolling recent posts

Monday, April 2, 2012

சீனாவில் பத்து லட்சத்திற்கும் மேலான குகை வீடுகள்

தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போல அழகிய உயரிய கட்டிடங்களை சீனாவில் காண்பது மிக எளிது. அண்மையில் கூட ஒரு பல அடுக்கு ஹோட்டல் ஒன்று ஆறே நாட்களில் கட்டி முடிக்கபட்டுளது. இது ஒலி தடுப்பான், வெப்ப சீரோட்டம்,  மற்றும் நில நடுக்கத்திலிருந்து காக்கும் தன்மை என எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கட்டியுள்ளனர். இந்த பதிவு அதை பற்றி அல்ல என்பதை தலைப்பை பார்த்தே அறீவீர்கள்!

இப்படி சீனா வேகமா முன்னேறிகொண்டிருக்கும் நேரத்திலும் கூட, பண்டைய கால குகை வீடுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன என்பது சற்றே வியப்பை தருகிறது.


சீனாவின் யானான் என்ற பகுதியில் பத்து லட்சத்திற்கும் மேலோனோர் குகை வீடுகளில் வசித்து வருகின்றனர். சில குகை வீடுகள் வெறும் அத்தியாவச தேவைகள் கொண்டதாகவும், சில குகை வீடுகள் அழகானதாகவும், உயர்ந்ததாகவும் உள்ளன.


இங்கு பிறந்து வளர்ந்து படித்த பின், வேலை தேடி அருகே இருக்கும் நகரங்களுக்கு சென்ற பின் தான் இவர்கள் கான்க்ரீட் வீடுகளில் குடி பெயர்கின்றனர். இதில் விந்தை என்னவென்றால், இவர்கள் பணி ஓய்வு பெற்ற பின் மீண்டும் இந்த குகை வீடுகளில் வசிக்கவே விரும்புகின்றனர்.


இந்த குகை வீடுகள் வெயில் காலத்தில் குளுமையாகவும், குளிர் காலத்தில் சூடாகவும் இருப்பதாகவும் மேலும் இந்த குகை வீடுகள் மிக அமைதியாகவும், அபாயகரமற்றதகவும் உள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.


சீன வரலாற்றில் இந்த குகை வீடுகள் ஓர் முக்கிய அங்கம் வகிக்கின்றன. 1930 ம் ஆண்டு கம்யூனிஸ்ட் புரட்சியாளர் "மா சே துங்" யானான் குகை வீடுகளில் தங்கி கல் மேஜைகளையும் மண்ணாலான இருக்கைகளையும் பயன்படுத்தியுள்ளார். இவரே முதன் முதலில் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை கொண்டு வந்தவராவார்.

மேலும் சீனாவின் தற்போதய உப ஜனாதிபதி "சி ஜின்பிங்" ஷான்சி மாகணத்தில் 7 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். இவரே சீனாவின் அடுத்த ஜனதிபதியகவிருக்கிறார்.






மனிதன் முதலில் குகைகளில் தான் வாழ்ந்து வந்தான் பின் நாகரீகம் வளர்ந்த பின் குகையை விட்டு வெளியே வந்து மண்ணாலும், கல்லாலும்  சமவெளிகளில் வீடுகளை கட்டிகொண்டான். இந்தியா, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் குகைகள் உள்ளன. இந்தியாவிலும் குகை வீடுகள் காணபடுகின்றன. ஆனால் சீனாவில் தான் இவை அதிகமா உள்ளன. மேலும் சீனா பண்டய கால வாழ்க்கை முறைகளை தற்போதும் பேணி காத்து வருவதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்

சீனாவில் மொத்தம் 3 கோடிக்கும் மேற்ப்பட்டோர் குகை வீடுகளில் வசிப்பதாக தெரிகிறது.


மூன்று அறைகள் மற்றும் ஒரு கழிப்பறை வசதி கொண்ட குகை வீடு (750 sqft) யானான் பகுதியில் ரூ 23 லட்சத்திற்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு அறை கொண்ட சாதாரண குகை வீடு மாதம் ரூ1500 வாடகை வசூலிக்கபடுகிறது .


மேலும் இந்த வீடுகள் பரம்பரை வழி முறையில் பாதுகாத்து வரப்படுகிறது. ஆகையால் வாடகைக்கு விடப்பதுவது மிக அபூர்வம என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


###இயற்கையை ஒட்டி வாழ்வதும் ஒரு சுகம் தானே!###



2 comments:

  1. கோவை நேரம் அவர்களே! தங்கள் வருகைக்கும், பின்னுட்டத்திர்க்கும் மிக்க நன்றி.

    ReplyDelete