Scrolling recent posts

Friday, April 6, 2012

ஜப்பானிய கப்பல் அமெரிக்க கடலோர காவற்படையால் பசிபிக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது!

ஏப்ரல் 6 - ஜப்பானிய கப்பல் அமெரிக்க கடலோர காவற்படையால் கடலில் மூழ்கடிக்கப்பட்டது! இக்கப்பல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்ப்பட்ட சுனாமியில் கடலில் அடித்து செல்லப்பட்டு தத்தளித்து வந்தது. இதனை அமெரிக்க கடலோர காவற்படை நேற்று மேற்கு அலாஸ்காவின் தென்கிழக்கே 180 மைல் தூரத்தில், இக்கப்பல் சுட்டு மூழ்கடிக்கப்பட்டது! இக்கப்பல் 6000 அடி ஆழத்தில் மூழ்கடிக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இக்கப்பலின் பெயர் "ரயௌ - உன் மறு" என்றும் இதன் அளவு 164 அடி என்றும் தெரியவந்துள்ளது. இதனை மூழ்கடிக்க சுமார் நான்கு மணி நேரம் எடுத்துகொண்டதாக அமெரிக்க கடலோர காவற்படையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நேரம் புகை மண்டலம் பரவி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இக்கப்பல் சமுத்திரத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் மிதந்து வந்தும், ஜப்பானிய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது, ஜப்பானிய அரசின் சுனாமி தாக்கியதில் இருந்து இன்னும் மிளாமல் கஷ்டபடுவது நன்கு தெரிகிறது. இந்த  சுனாமியில் சுமார் 15000 பேர் உயிர் இழந்ததுடன் அணு உலையும் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடதக்கது.


சுமார் ஐந்து மில்லியன் டன் டேப்ரிஸ் எனும் கப்பல், படகு, வீடு, கார்களில்ருந்து சேதாரமான உலோக/ பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் மிதந்து வருவதாகவும்  தினம்  தினம் பசிபிக் கடலின் கரை ஒதுங்குவதாகவும் தெரிகிறது.






இக்கப்பல் மீன் பிடிப்பதற்க்காக பயன்படுத்தப்பட்டதாகவும், பழுதின் காரணமாக ஸ்க்ரப்பிர்க்காக கரையின் ஓரமாக நங்கூரம் இடப்பட்டிருந்தது. சுனாமியின் காரணமாக இது கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு கட்டுப்பாடின்றி மிதந்து வந்தது. மேலும் இக்கப்பல் பழுதடைந்ததினால் திசை காட்டும் கருவிகள் இன்றி இருந்துள்ளது.


கட்டுப்பாடின்றி மிதந்து வந்ததால், மற்ற போக்குவரத்து கப்பல்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் அஞ்சப்படு வந்தது. மேலும் இதில் 7570 லிட்டர் பெட்ரோல் இருப்பதாகவும் அதனால் அதிக சேதங்கள் ஏற்படலாம் என்றும் கருத்தில் கொண்டு இதனை நேற்று அமெரிக்க கடலோர காவற்படையால் மூழ்கடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment