Scrolling recent posts

Monday, April 9, 2012

கிட்னி விற்று ஐ-போன் வாங்கிய சீனத்து இளைஞன்!

வாங் என்ற 17 வயது சீனத்து இளைஞன், தன் கிட்னியை விற்று அதில் கிடைத்த பணத்தினால் ஆப்பிள் நிறுவனத்தின் அனைவராலும், மிகவும் விரும்பகூடிய ஐ- போன் மற்றும் ஐ-பேட் வாங்கியிருக்கிறான்.






இப்பொருட்களை வாங்க எப்படி பணம் வந்தது என்று வாங் -கின் தாயார் கேட்ட போது, வாங் தன் கிட்னியை விற்று அதில் கிடைத்த பணத்தினால், வாங்கியதாக தெரிவித்துள்ளான்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த  வாங்-கின் தாயார், இச்செய்தியை வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளார்.


அதன் வீடியோ இணைப்பு 





ஒரு சீன பத்திரிகையின்படி ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கிட்னியை எடுத்து வேறு நபருக்கு பொருத்துவதற்காக வாங்கின் கிட்னியை விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் டாக்டரும் கைதாகியிருக்கிறார்.

கிடைக்கபெற்ற தகவலின்படி, கிட்னியை எடுத்து விற்ற நபர், சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை சரி செய்ய இந்த தொழிலில் இறங்கியதாக தெரிகிறது. இச்சம்பவத்தில், அவருக்கு 17.5 லட்சம் கிடைத்ததாகவும், வாங்-கிற்கு வெறும் 1.5 லட்சம் மட்டுமே கொடுத்திருக்கிறார். மேலும், அவர் ஆபரேஷன் செலவும், டாக்டர் பீசும் கொடுத்திருக்கிறார்.

ஒரு தகவலின்படி, சீனாவில் 15 லட்சம் உடல் மாற்று பாகங்கள் தேவைபடுவதாகவும், ஆனால் வெறும் 10,000 பேருக்கு மட்டுமே ஒரு வருடத்திற்கு மாற்று சிகிச்சை நடைபெறுவதாகவும் தெரிவிக்கிறது.


###டெக்னாலஜி நமக்கு உதவவே தவிர, அவற்றுக்காக நம்மையே குறை படுத்தி கொள்வது எவ்விதத்தில் சரி? ###

No comments:

Post a Comment