Scrolling recent posts

Tuesday, April 3, 2012

அமெரிக்காவில் பறக்கும் கார் - வெற்றிகரமாக பரிசோதனை ஓட்டம்!

அமெரிக்காவின் டேர்ரபிவ்ஜியா என்ற விமான நிறுவனம் பறக்கும் கார் மாதிரியை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. கடந்த மார்ச் 23 அன்று நியுயார்க் மாகாணத்தில் உள்ள பிளாட்ஸ்பர்க் இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கார் விண்ணில் பறக்கவும், சாலையில் சாதாரண காரைப்போல் ஓடவும் செய்யும்.



இக்கார் இரண்டு பேர் அமரகூடிய இருக்கை வசதியுடன், இறக்கைகளை மடக்கிக்கொண்டு சாதாரண "அன்லீடட் பெட்ரோல்" -ல் சாலையில் சாதாரண காரைபோலவும், இறக்கைகளை விரித்து விண்ணிலும் இயங்கக்கூடியது.


சுமார் எட்டு நிமிடங்கள் இக்கார் 1400 அடி உயரம் வரை பறந்தது. விண்ணில் பறந்தும், சாலையில் ஒட்டியும் இயங்கும் இக்கார் ஓர் முக்கிய இடத்தை வகிக்கிறது என்று இக்காரினை பரிசோதனை ஓட்டம் செய்த டேர்ரபிவ்ஜியாவின் முதன்மை பைலட் பில் மேடீர் கூறியுள்ளார்.


இது பற்றி டேர்ரபிவ்ஜியாவின் COO அன்னா ம்ரசெக் டிட்ரெச் கூறுகையில், இந்த மாதிரி பரிசோதனை ஓட்டம், உற்பத்தி செய்து வெளியிடுமுன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த ஆண்டிற்குள் இக்காரினை வெளியிட இருக்கிறோம் . இதன் விலை அமெரிக்கன் டாலர் 279,000  (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.4 கோடி)ஆக நிர்ணீயக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக $10,000 கட்டி இக்காரினை வாங்கிகொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.


இக்காரினால் காண விரும்புவோர் , தற்சமயம் இக்கார் நியுயார்க் ஆட்டோ ஷோ- வில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 வரை இக்காரினை  நியுயார்க் ஆட்டோ ஷோ- வில் காணலாம்.


No comments:

Post a Comment