Scrolling recent posts

Thursday, April 5, 2012

எங்கே செல்கிறது தமிழகம்! - விவாகரத்தில், பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் முதலிடம்!!!

2010 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் விவாகரத்து அதிகம் பெரும் தம்பதியர்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதில் டெல்லி கடைசி இடத்தை பெற்றுள்ளது.இது சிலருக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம். 

மத்திய சுகாதார துறையிடம், திருமண பதிவாளர் அலுவலகத்திலிருந்து சமர்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில்தான் இவ்விவரம் தெரிவிக்கப்பட்டுளது.


இவ்வறிக்கையின்படி, தமிழ் நாடு 8.8% (முதலிடம்)  , ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளா 8.2% (இரண்டாமிடம்), ஓடிஸா 7.2%, இமாச்சல பிரதேசம் 7.1%, மகாராஷ்டிரம் 7% மற்றும் டெல்லி 4.1% (கடைசி) இடம் பிடித்துள்ளன.

2010 படி, இந்தியாவில் அதிக பட்சமாக 57.7% திருமணம் புரிந்தவர்களாகவும், 35.9% திருமணம் செய்யாதவர்கள் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுளது. மேலும், ஜம்மு காஷ்மீரில் தான் அதிகமானோர் (45.4%) திருமணம் செய்யாமல் இருந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுளது. 

டெல்லி, பெங்களுரு, மும்பை போன்ற நகரங்களில்தான் இவற்றில் முன்னிலை வகிக்கும் என்றிந்த நமக்கு இது ஒரு அதிர்ச்சியான அறிக்கைதான்! ஆண்  நண்பர்கள் , பெண் நண்பர்கள், லிவிங் டுகெதர் என்ற முறைகள் அங்கே தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே திருமணம் செய்யாமலிருக்க வழி செய்திருக்கும். திருமணம் இல்லாமல் விவாகரத்து எங்கே இருக்கபோகிறது?   




இது வரை செய்தி! 

###

கிழ் உள்ளவை ஏன் விவாகரத்து அதிகம் என்பன பற்றி அடியேன் கருத்து!

  • தம்பதியர்க்கிடையே புரிந்துகொள்ளமை, ஈகோ, ஆணாதிக்கம், பெருகி வரும் கிளப் கலாச்சாரங்கள் போன்றவை இதற்க்கு காரணமாக இருக்கலாம். 
  • வழக்கம் போல் IT மக்கள்தான் இதற்கு காரணம் என்றும் வரலாம். கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அதிக கம்பனிகளும், தொழிற்சாலைகளும் வந்ததால் வேலையின்மை வெகுவாக குறைந்துவிட்டது. இதுவே வெளி மாநிலத்திலிருந்து தொழிலாளர்களை தமிழகம் தேடி வரவைக்க காரணமாக இருந்தது. 
  • ஒரு மனிதன் தன் சுய தேவைகளை பூர்த்தி செய்ய பணம் மிகமிக அவசியம். பணம் கிடைத்தபின்தான் அவன் தன் சுதந்திரத்தையே உணர்கிறான். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் இருக்கும் போது திருமணமானபின், ஏதோ ஒருவகையில் தன்  சுதந்திரத்தை இழக்கிறார்கள். இதுவே நாளுக்குநாள் அதிகமாகி ஒருநாள் வெடித்து விவகாரத்தில் முடிகிறது பின் விவாகரத்து ஆகிறது.
  • மேலும் தற்போதய சூழ்நிலையில் படிப்பு முடித்து, ஒரு நல்ல வேலையில் அமர்ந்து, கொஞ்சம் பணம் சம்பாதித்து வீடு, ஒரு பிளாட், ஒரு கார் என ஆன பின்தான் பலர் கல்யாணமே செய்து கொள்கிறார்கள். இதற்கும் அவர்கள் முப்பதை எட்டி இருப்பர்கள். இந்த வசதிகள் வந்தவுடன் அவர்கள் தானே ராஜா என்று நினைப்பும் வந்து விடும். அதனை வரும் பெண் புரிந்து நடந்தால் அக்குடும்பம் செழிக்கும். அவர் மனைவியும் அவரைப்போலவே இருந்தால் அது விவாகாரத்தில் தான் முடியும். (அப்பெண்ணும் பணிக்கு சென்று பணம் சம்பாதிக்கும்போது, நாம் ஏன் தனியாக வாழ முடியாது என்று வெளியே வந்துவிடுகிறார். இல்லையேல் மேல் பத்தியில் உள்ள சுதந்திரம் அவரை உந்தி பிரிய வைத்துவிடும்)

  • காதல் கல்யாணங்கள் இப்போது அதிக பிரச்சனை இல்லாமல், இப்போது அநேகம் பெற்றோர்கள் ஆதரிக்கிராகள். இங்கே காதலையும், காதல் திருமணத்தையும் நான் குறை சொல்லவில்லை. இங்கே வயது வித்தியாசம் கவனிக்க வேண்டும். அநேகம் பேர் ஒரே வயதும் இல்லை ஒன்றிரண்டு குறைவாக இருப்பவர்கள். பொதுவாகவே ஒரே வயது ஆணும் பெண்ணும் திருமணம் செய்யும் போது ஆணை விட பெண் நன்கு Mature ஆகி இருப்பாள். இதை அந்த ஆணும் பெண்ணும் நன்கு புரிந்து நடந்தால் அவர்கள் வாழ்க்கை இனிக்கும். இல்லையேல் இருவறுக்குமிடையே சண்டை சச்சரவு தான்...முடிவு விவாகரத்து! (இதற்க்க்காகதான் முன்காலத்தில் ஆணை விட பெண்ணிற்கு மூன்றோ இல்லை அதை விட குறைவான வயதுடைய பெண்ணை திருமணம்     செய்து வைக்கப்பட்டது.)
  • பெண்ணுரிமை, பெண்கள் கல்வியறிவு, ஆண்/பெண் சமத்துவம், பெண்களின் இண்டேபெண்டேன்சி ஆகியவை பெண்களை தான் ஆணுக்கும் எவ்வரும் சளைத்தவள் அல்ல என்று நெனைக்க வைக்கும். இதில் எந்த தப்பும் இல்லைதான்! இந்த புரிதல் கணவன் - மனைவிக்கிடையே இருத்தல் மிக அவசியம்! (முன்காலத்தில் பெண்கள் இவற்றினை அவ்வளவாக பெற்றிருக்கவில்லை. அதனால் அவர்கள் கணவன் சொல்லே மந்திரம் என்றிருந்தனர். இப்போது அதெல்லாம் மலையேறி போய்விட்டது!)
  • ஆண்களும் தன் மனைவிக்கென்று ஒரு மனம் உண்டு என்றும் அவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப சில அட்ஜஸ்ட்மேன்ட்ஸ் செய்தல் வேண்டும். 
  • ஒழுக்கமின்மை / கள்ளத்தொடர்பு / நம்பிக்கையின்மை - இவை நாளுக்குநாள் அதிகரித்து வருவது வருத்தம்தான். கள்ளகாதல் செய்தி இல்லாத செய்திதாளே இல்லை என்றாகிவிட்டது. இவைகளும் ஒருவகையில் விவாகரத்தில் கொண்டு சேர்க்கும். இதில் சோகம் என்னவென்றால் பெரும்பாலும் எவை கொலைகள் வரை கூட செல்வது.
உங்கள் கருத்துகளை பகிரவும். 


5 comments:

  1. வருந்தத்தக்க சா(சோ)தனை !

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி கூடல் பாலா! மீண்டும் வருக!

    ReplyDelete
  3. திருமணத்திற்குக் காத்திருக்கும் இளவட்டங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய செய்தி.
    அறியச் செய்த தங்களுக்குப் பாராட்டுகள்.
    நன்றி.

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி முனைவர் பரமசிவம்! மீண்டும் வருக!

    ReplyDelete
  5. 1.ஒன்றுபட்ட கூட்டு குடும்பம் சிதைந்து மனிதர்களை நேசிக்கும் மனோபாவமும் குறைந்து விட்டது. நானும் சம்பாதிக்கிறேன்: நீயும் சம்பாதிக்கிறாய். உனக்கு நான் ஏன் கட்டுப்பட வேண்டும். உன் பேச்சை நான் எதற்கு கேட்க வேண்டும் என்ற ஈகோ.
    2.நமது நாட்டிலும் விவாகரத்து தினம் தினம் அதிகரித்து வருவது பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் இப்போது நன்றாக குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்கள். மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக்கொள்வதற்கு, அவன் சம்பாதிக்கும் பணத்தை மகளை ஏவிவிட்டு பிடுங்குவதற்கு, மகளின் கள்ளக்காதலை மாப்பிள்ளை கண்டும் காணாமல் இருக்கச் செய்வதற்கு.நம் நாட்டில் ஆண்டுக்கு 76,000 பொய்க் கேசுகள் (498A) போடப்பட்டு ஒரு பாவமும் அறியாத வயதான தாய்மார்களும் இளம் பெண்களும் சின்னஞ்சிறு குழந்தைகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
    3.கடமைகளை செய்யாமல் உரிமைகளை மட்டும் கோரும் பெண்ணியவாத குள்ளநரிகளின் கோர கரங்களில் இருந்து தேச பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.நாட்டில் கடமைகளை செய்ய மட்டுமே ஆண் வர்க்கம், உரிமைகளை பெற பெண் வர்க்கம் என்னும் அக்கிரமங்கள் அரங்கேற்றப்படுகிறது.
    4.கற்பை கல்லூரிகளிலும், கடைதெருக்களிலும் விற்கும் பொருளாக அல்லது இலவசமாக பரிமாறும் பொருளாக எண்ணி தறி கேட்டு வாழும் தரம் கெட்ட பெண்கள்
    5கள்ளக்காதல் விவகாரத்தில் இந்திய no ;1இந்தியசட்டம் பல பெண்களுக்கு கள்ளக் காதலை வளர்த்துக் கொள்ள மிகவும் சாதகமாக இருந்து வருகிறது !6.இந்தியாவில் திருமணம் செய்தால் அரசாங்க ஆதரவுடன் கண்டிப்பாக ஒருநாள் பொய் வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்வது உறுதி. இதனை தடுக்க எந்தவித நச்சு முறிவு மருந்தும் இந்த உலகத்தில் கிடையாது!!
    7.ஆண்கள் பயிலும் பள்ளிகளைவிட பெண்கள் பயிலும் பள்ளிகளுக்கு நிதிஉதவி இந்தியசட்டம் ஆண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதால்
    8.இந்தியாவில் தற்போதைய கணக்குப்படி ஆண்டுக்கு 55 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களால் பாதிக்கப்பட்டுதான் உயிரை இழக்கிறார்கள்.
    9.ஒரு ஆண் தனக்கு நேரும் சங்கடங்களை, உடல்(sex), மன ரீதியான பாதிப்புகளை தயக்கத்தின் காரணமாக வெளியில் சொல்வதில்லை.இந்தியசட்டம் சட்டம் ஆண்கள் காலில் பூட்டப்பட்ட விலங்காக உள்ளது. ஆண்களுக்கு எதிராகப் பல விதிகள் .
    10.இந்தியாவின் தேசிய நடைமுறை. இதற்கு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்,கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தனது கள்ளக்காதலன் மற்றும் தங்கையுடன் சேர்ந்து, கட்டிய கணவனின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த பெண்ணைப். …….,;;;;……,,,,..,--
    இப்போதைய உடனடித் தேவை --
    அனைத்து சட்டங்களும் உடனடி மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் மற்றும் போர்க்கால அடிப்படையில் இதிலுள்ள ஓட்டைகள் அடைக்கப் பட வேண்டும். இப்போது உள்ள சட்டங்களில் ஓட்டைகளால் தீவிரவாதத்தை போன்று இன்னும் பல மடங்கு சக்தி வாய்ந்த கலாசார சீரழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை நடுவண்-மாநில அரசுகள் உடனுக்குடன் கவனித்த தீர்த்து வைக்க ஆவண செய்ய வேண்டும்.

    ReplyDelete