Scrolling recent posts

Thursday, April 5, 2012

கூகுளின் தானியங்கி கார் சோதனை ஓட்டம் வெற்றி! (படங்கள் இணைப்பு)

ஆளில்லா போர் விமானம், ஆட்டோ பைலட் என்பன நாம் ஏற்கனேவே  கேள்வி பட்டிருக்கிறோம் ஆனால் தானியங்கி கார் இதுவரையில் நடைமுறையில் இல்லை. முதன்முதலாக கூகுளே நிறுவனம் இதை 2010ல் இந்த ப்ரொஜெக்டை ஆரம்பிப்பதாக செய்தி வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இதனை சோதனை ஓட்டம் நடத்தியதி அது வெற்றியும் பெற்றுவிட்டது.


இந்த கூகுளின் தானியங்கி கார், டோயோடவின் "ப்ரயுஸ்" என்ற காரில் கூகுளின் டேக்நாலாஜியுடன் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொண்டது. இதில் ஸ்டீவ் மகான் எனும் பார்வை இல்லாதவரை (95% பார்வை குறைபாடு )ஓட்டுனர் இருக்கையில் அமரவைத்து இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.


இக்கார் அவரை அவர் வீட்டில் இருந்து அருகில் உள்ள டேகோ பெல் என்ற பாஸ்ட் பூட் உணவகத்திற்கு சென்று, டிரைவ் த்ருவில் உணவு வாங்கி, அங்கிருந்து ட்ரை  க்லீனேர் கடைக்கு சென்று அவருடையை துணியை வாங்கிக்கொண்டு மீண்டும் அவர் வீட்டிற்கு தானாக ஓட்டிசென்றது.


ஸ்டீவ் மகான், கூகுள் பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இக்கார் சோதனை ஓட்டத்தில் பங்கு பெற்றனர்.

இதுபற்றி ஸ்டீவ் மகான் கூறுகையில்,  இது எனக்கு மிக சுதந்திரமான வாழ்க்கையையும், தன்னிச்சையாக எங்கும் செல்லவும் உதவும். மேலும் இது என் வாழ்க்கையின் பெஸ்ட் டிரைவிங் என குறிப்பிட்டார்.

அதற்க்கான வீடியோ இணைப்பு :




இது பற்றி கூகுள் கூறும்போது, இந்த டேக்னலோஜியுடன் காரினை ஓட்டும்போது மிகவும் பாதுக்காப்பானதாகவும், மகிழ்ச்சிகரமானதகவும் இருக்கும்.

இன்னும் நிறைய சோதனைகள் செய்யவேண்டுமென்றும், இதுவரை 200,000 மைல்ஸ் கம்ப்யூட்டர் உதவியுடன் இக்கார் இயக்கப்பட்டுள்ளடாக் கூகுள் அதன் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.





காரின் மேல் பாகத்தில் பொருத்தப்பட்ட சுழலும் பாகம், காரின் அருகில் உள்ளவைகளை தொடர்ந்து கண்காணித்து "ஆர்டிபிசியல் இண்டேல்லிஜென்ஸ்" மூலம் ஒரு மனிதனைப்போல் இக்காரினை இயக்க உதவுகிறது.


தானியங்கி காரினை தற்சமயம் எங்கும் ஓட்ட முடியாது. அதற்கு மாகாண சட்டம் இயற்றபடவேண்டும். தற்சமயம் நிவெடா மாகாணத்தில் இச்சட்டம் அனுமதி பெற்றுள்ளது. மற்ற மாகாணங்கள் பின்பற்றும் என்று தெரிகிறது.


கூகுள் மட்டுமில்லாமல், போர்ட், பி எம் யு, மேர்சிடெஸ் மற்றும் ஆடி ஆகிய கார் நிறுவனகள் இம்முறையில் காரினை இயக்க திட்டமிட்டுள்ளன.


தானியங்கி கார்கள் சாலையை அடைய இன்னும் சில வருடங்களே உள்ளன. இது மோட்டார் உலகில் ஒரு புரட்சியை கண்டிப்பாக ஏற்படுத்தும்.



No comments:

Post a Comment