ஹாலிவூட் நடிகர் ஜான் டிரவோல்டா வின் கார் திருடன் - உண்மை சம்பவம் #3
செந்தில் கௌதமன்
லாஸ் ஏஞ்செலஸ் - ஹாலிவூட் நடிகர் ஜான் டிரவோல்டாவின் 1970 ம் வருட மெர்சிடேஸ் பென்ஸ் கார் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாண்டா மோனிகா வில் காணமல் போய்விட்டது. அமெரிக்காவில் கார் திருடு போவது என்பது ஒரு சாதாரண நிகழ்வு தான் என்றாலும் இது ஒரு நடிகரின் கார் என்பதாலோ என்னவோ போலீசார் அதிக கவனம் செலுத்தி இதனை கண்டு பிடித்திருக்கிறார்கள். (பொதுவாக கார் காணமல் போனால் போலீசில் புகார் தெரிவித்து பின் அவர்கள் தரும் புகார் பிரதியை காப்பிட்டு நிறுவனத்திற்கு அனுப்பி அதற்குண்டான பணத்தை வாங்கிக்கொள்ளவேண்டும். உங்கள் கார் திரும்ப கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயம்.)
![]() |
1970 ம் வருட மெர்சிடேஸ் பென்ஸ் கார் |
அதன் விவரம் இங்கே.
மைகேல் கிரீன் என்பவன் நம்ம ஊர் புதுபேட்டை மாதிரி கார்களை திருடி "சாப் ஷாப்" எனப்படும் பாகங்களை பிரித்து தனித்தனியாக விற்கும் கடையை லாஸ் ஏஞ்செலஸ்-ல் நடத்தி வந்திருக்கிறான். இவன் தான் ஹாலிவூட் நடிகர் ஜான் டிரவோல்டாவின் 1970 ம் வருட மெர்சிடேஸ் பென்ஸ் காரை திருடி அதனை வேறொரு நபருக்கு விற்றுருக்கிறான் (செலிப்ரிட்டி கார்ன்னு அவரும் தெரிஞ்சே வாங்கி இருக்கிறான்). அவன் இது வரை 30 கார்களை திருடி பாகங்களை பிரித்து தனித்தனியாக விற்றிருக்கிறான்.
![]() |
மைகேல் கிரீன் |
![]() |
ராட்போர்ட் |
அவனை கடந்த ஜனவரி மாதம் போலீஸ் பிடித்திருக்கின்றனர். அவனுக்கு இன்று நீதி மன்றத்தில் 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது.
அந்த காரை வாங்கியவனுக்கும் ஒன்றரை வருடம் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது.
### எல்லா ஊரும் ஒரே மாதிரிதான்! எல்லா போலிசும் ஒரே மாதிரிதான்! எல்லா திருடனும் ஒரே மாதிரிதான்! போல!###
No comments:
Post a Comment