Scrolling recent posts

Friday, March 30, 2012


சீனத்து சிறப்பு முட்டைகள் - உண்மை சம்பவம் #2
செந்தில் கௌதமன் 

ஈஸ்டர் பண்டிகையின்போது முட்டை கொடுத்து கொண்டாடுவது வழக்கம். (இப்போதெலாம் முட்டை வடிவ பிளாஸ்டிக்கில் ஜெல்லி பீன்ஸ், சாக்லேட் வைப்பது வழக்கமாகி விட்டது). தலைப்புக்கு வருவோம். 

அதாவது சீனாவில் டாங் யாங் நகரில் ஒரு புதுமையான வழக்கம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. கன்னி பையன்களின் (பத்து வயதுக்கு குறைவான சிறுவன்கள்) சிறு நீரை சேகரித்து அதில் முட்டைகளை ஊற வைத்து, பின் சிறுநீரில் வேகவைத்து உண்ணபடுகிறது! (அய்யோட சாமீ ஆளை விடு!)




இதனால் பள்ளிகளில், தனி வீடுகளில் கன்னி பையன்களின் சிறு நீர் சேகரிக்கபடுகிறது. அநேகம் பேர்க்கு ஏன் இதை செய்கிறோம் என்றே தெரியவில்லையாம். இது காலம் காலமாக அம்மக்கள் கடைபிடிக்கப்பட்டு இன்று வரை தொடர்கிறது! 

சிலர் இம்முட்டைகளை உண்பதால் கை கால் மூட்டு வலி வருவதில்லை என்றும் நம்புகின்றனர்! 

ஒருவேளை இது நம்ம ஊர் கோமியம் (பசுவின் சிறுநீர்) போலவோ! 

No comments:

Post a Comment